Monday, January 27, 2014

Z (France, 1969)



ஆம் Z (சி). இதுதான் இந்த திரைப்படத்தின் பெயர். இது பிரெஞ்சு மொழி திரைப்படமாக இருந்தாலும் கிரேக்க நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு பிணைக்கப்பட்ட ஒரு கதை. இப்படத்தை இயற்றியவர் கோஸ்டு கோவஸ் (Costa-Gavras).

See this trailer before reading......



_________________________________________________________________

ராணுவ ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் வலது சாரி அரசை எதிர்த்து எதிர் கட்சியின் தலைவர் கிரிகோயிஸ் லேம்பிரேக்ஸ் (Grigoris Lambrakis) போராட்டம் நடத்துகிறார். இப்போராட்டத்தை எதிர்க்கும் ஆழும் கட்சியினர் போலிசின் உதவியோடு இதை ஒடுக்கப் பார்க்கின்றனர். 

ஒரு கூட்டத்தில் அவர் பேசிவிட்டு வரும் போது உள்ளூர் ரவுடிகள் அவரை தாக்கிவிட்டு சென்று விடுகின்றனர். சிகிச்சை பலனின்றி அவர் இறக்க போலிசார் இச்சம்பவம் விபத்து என கூறுகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க வரும் அதிகாரி CHRISTUS SARTZEKIS பத்திரிக்கையாளர் துணையோடு இச்சம்பவம் ஒரு திட்டமிட்டக் கொலை என நிரூபிக்கிறார். 




_________________________________________________________________

இது ஒரு அரசியல் படம். எப்போதும் மெதுவாக செல்லும் இவ்வகையான படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தோய்வு இல்லாத திரைக்கதை. விறுவிறுப்பான காட்சிகள். நகைச்சுவை என்று பயணிக்கிறது இப்படம்.

கொலை நிரூபிக்கப்பட்டாலும் அரசியல் சதுரங்கத்தில் கீழ்மட்ட ரவுடிகள் மட்டும் தண்டனை பெறுகின்றனர்.



Z (சி) என்றால் கிரேக்க மொழியில் ”அவன் உயிரோடு இருக்கின்றான்” என்று பொருள்,வலதுசாரிகள் ஆட்சியில் உள்ள கிரேக்கத்தில் இந்தஎழுத்தே தடைசெய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் பணிபுரிந்த பலர் கிரேக்க நாட்டில் நுழைய தடைசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment