Monday, January 27, 2014

Z (France, 1969)



ஆம் Z (சி). இதுதான் இந்த திரைப்படத்தின் பெயர். இது பிரெஞ்சு மொழி திரைப்படமாக இருந்தாலும் கிரேக்க நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு பிணைக்கப்பட்ட ஒரு கதை. இப்படத்தை இயற்றியவர் கோஸ்டு கோவஸ் (Costa-Gavras).

See this trailer before reading......



_________________________________________________________________

ராணுவ ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் வலது சாரி அரசை எதிர்த்து எதிர் கட்சியின் தலைவர் கிரிகோயிஸ் லேம்பிரேக்ஸ் (Grigoris Lambrakis) போராட்டம் நடத்துகிறார். இப்போராட்டத்தை எதிர்க்கும் ஆழும் கட்சியினர் போலிசின் உதவியோடு இதை ஒடுக்கப் பார்க்கின்றனர். 

ஒரு கூட்டத்தில் அவர் பேசிவிட்டு வரும் போது உள்ளூர் ரவுடிகள் அவரை தாக்கிவிட்டு சென்று விடுகின்றனர். சிகிச்சை பலனின்றி அவர் இறக்க போலிசார் இச்சம்பவம் விபத்து என கூறுகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க வரும் அதிகாரி CHRISTUS SARTZEKIS பத்திரிக்கையாளர் துணையோடு இச்சம்பவம் ஒரு திட்டமிட்டக் கொலை என நிரூபிக்கிறார். 




_________________________________________________________________

இது ஒரு அரசியல் படம். எப்போதும் மெதுவாக செல்லும் இவ்வகையான படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட வடிவத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தோய்வு இல்லாத திரைக்கதை. விறுவிறுப்பான காட்சிகள். நகைச்சுவை என்று பயணிக்கிறது இப்படம்.

கொலை நிரூபிக்கப்பட்டாலும் அரசியல் சதுரங்கத்தில் கீழ்மட்ட ரவுடிகள் மட்டும் தண்டனை பெறுகின்றனர்.



Z (சி) என்றால் கிரேக்க மொழியில் ”அவன் உயிரோடு இருக்கின்றான்” என்று பொருள்,வலதுசாரிகள் ஆட்சியில் உள்ள கிரேக்கத்தில் இந்தஎழுத்தே தடைசெய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் பணிபுரிந்த பலர் கிரேக்க நாட்டில் நுழைய தடைசெய்யப்பட்டுள்ளனர்.

Amour (France, 2012)



Language: French | Country: France\Austria | Year: 2012 | Starring:  Jean-Louis Trintignant, Emmanuelle Riva and Isabelle Huppert | Director: Michael Haneke | Genre: Drama

See this trailer before reading....





வயது முதிர்ந்த நிலையில் உள்ள ஒரு கணவன் மனைவி இடையெ நடக்கும் ஒரு கதை. தங்கள் கடைசிகாலத்தை நிர்ணயிப்பது “அன்பு” மட்டும்தான் என்று நினைத்து வாழ்கிறார்கள். படத்தின் பெயர் Amour தமிழில் இதற்கு இணையான சொல் ”அன்பு”.

பாரிஸ் நகரில் ஒரு அபார்ட்மென்டில் வாழும் ஜார்ஜஸ் மற்றும் ஆனி ஓய்வு பெற்ற இசை ஆசிரியர்கள்.



ஆனி ஒரு ஆபரேசனில் தனது வலது பக்க உடல் செயலற்று போகிறது. ஜார்ஜஸ் ஆனியை கவனித்துக்கொள்கிறான். அவளுடைய உடலில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அவளை கருணைக்கொலை செய்கிறான்.

மெதுவாக செல்லும் இக்கதை சிறு சிறு ஆச்சரியங்களுடனும் தேர்ந்த நடிப்பாலும் கதை நகர்கிறது.

The Tracker (Australia, 2002)




மொழி : ஆங்கிலம் | நாடு : ஆஸ்திரேலியா | வருடம் : 2002 | இயக்குனர் : ரால்ப் டி ஹீர் ( Rolf de Heer ) | நடிகர்கள் : டேவிட் குபிளில், கேயரி ச்வீட், டைமன் கமியு

See the Trailer before reading.......................................



இந்த கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் விதமாக அமைகைப்படுள்ளது. மூன்று வெள்ளைகர்கள், கொலைக்குற்றம் சற்றபெற்ற ஒரு பழங்குடி இனத்தை சார்ந்த ஒருவனை தேடி சேலும் கதை. இவர்களுக்கு பதையெய் காண்பித்து வழிநடத்திச்சேல்பவனும் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவான் (The Tracker).



கதாபாத்திரங்களில் பெய்ர்கள் குறிபிடாமல் அவர்களின் தன்மையே வைத்து கதை சொல்லப்பட்டுள்ளது.

Tracker - வழிகாட்டி - டேவிட் குபிள
Fanatic - வெறிபிடித்தவன் - கேயரி ச்வீட்
Follower - பின்பற்றுபவன் - டைமன் கமியு
Veteran - அனுபவமுள்ளவர்

ஆஸ்திரேலியக்காடுகளில் கொலைக்குற்றம் சற்றபெற்றவனை தேடும் இவர்கள் இனவெறிக்கு அதரவாக தங்களை அட்படுதிகொள்கிரர்கள். Fanatic - வெறிபிடித்தவன் இந்தகூட்டதின் தலைவன், இவன் வழிகாட்டியெய் (Tracker) நம்புகின்றான், ஆனால் Follower பின்பற்றுபவன், Tracker-மிது முதலில் நம்பிக்கை இல்லாமல் இருகிறேன். இவர்கள் செல்லும் பதையில் பார்க்கின்ற அப்பாவி பழங்குடி மக்களை வெறிபிடித்தவன் கொலை செய்கின்றான். இந்த கொலைகளை பார்த்து ஆத்திரம் அடையும் பின்பற்றுபவன் (Follower), வெறிபிடித்தவன் சங்கலியால் கட்டிபொடுகின்றன். இந்தகொலைகளை அப்படியே காட்சியாகக்காட்டமல், இவைகளை ஓவியமாக காட்டப்பட்டுள்ளது.



கொலையாளியெய் கண்டுபிடிப்பதுதான் கதைஎன்றலும், கதை கரு இந்த நான்கு மனிதர்களின் இனவெறி மற்றும் அவர்கள் மனதில் நிகழும் மாற்றங்களை பிரதிபளிக்கும் வண்ணம்முள்ளது.

கதை மெதுவாக சென்றாலும், இக்கதைக்களம் உலகளாவிய பிரச்சினை பற்றி பேசுவதால் பெரிய தாக்காத்தை உண்டாகும்.